Saturday, July 2, 2011

தோழி...! உனக்குத்தான்

தோழி...! உனக்குத்தான்
====================
தாலி அணிந்து
தலை குனிந்து உன் மாமியுடன்
வெள்ளவத்தையில் நீ
நடந்து சென்றது நேற்றுக் கண்டேன்.
உன்னுடன் பேச எனக்கு விருப்பமில்லை
அதனால் ஒதுங்கிப் போனேன்.

இந்தியாவுக்கு வந்து
தாலி கட்டிவிட்டுச் சென்ற
உன் கணவனிடம் செல்ல நீ
கொழும்புக்கு வந்துள்ளாய் போல
நன்று!

போய் வா தோழி!
அந்தக் காலத்தில்
நீயும் நானும்
பெண்விடுதலை,சம உரிமை
என்றெல்லாம்
கல்லூரியில் மேடை ஏறி பட்டிமன்றங்களில்
முழங்கியதெல்லாம பொய்யா?

குமரன்,
உன்சாதி இல்லை என்பதனால் தானே
நீ உன்னை உயிராய்
நேசித்தவனை விட்டு விட்டு
உன் கொள்கைக்கு(?) மாறாய்
சீதனம் கொடுத்து
நாளை கனடாவுக்கு
போகிறாய்!

நீ ஒருத்தி மட்டுமல்ல
உன்னைப் போல
பலர் இங்குள்ளார்.

என் பேனா எழும்
அடிமைப்படுத்தும்
ஆண்களுக்கு எதிராய்
மட்டுமல்ல
உன்னைப் போல
மாஜக் காரிகைகளுக்கு
எதிராகவும் எழும்.
-தாரணி

2 comments:

  1. பெண்களின் உள்ளத்தில் இருந்து இத்தகைய எதிரொலி வருவது மிக அரிது..துணிவுடன் பதிவு செய்திருக்கிறீர்கள் .....பொதுவாக கனவான்களான ஆண்களும் சீரிய சிந்தனை மிகுந்த பெண்களும் காதலில் பாதிக்கப்படுகிர்றாக்கள்...மிகவும் வருந்துகிறேன்..

    ReplyDelete
  2. இணையப் பதிவாளராகவும் வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஏற்கனவே முகப்புத்தகத்தில் உங்கள் கவிதைகளைப் படித்து மகிழ்ந்து கருத்துரையிட்டதும் நினைவிலோட ...
    இங்கும் வரவேற்கிறேன்.

    ReplyDelete