Tuesday, June 7, 2011

எதுவும் கேட்க வேண்டாம்


என்னை எதுவும் கேட்க வேண்டாம்
என் அம்மா சொல்வது போல் நான் வேண்டுமென்றே 
எந்த எந்தவொரு ஆணின்  முன்பும்  'இளித்து'க்கொண்டு நிற்பதில்லை
என் முக அமைப்பு அப்படி
நான் சும்மா நின்றாலே அவளுக்கு  அது
சிரிப்பது போலிருக்கும்

என் அண்ணன் சொல்வது போல்
'மாப்பிள்ளை பிடிக்க' நான் 'பேஸ் புக்'
பயன் படுத்துவதில்லை
என்னுடன் 'சட்'   செய்யவந்து விட்டு
என் வயதை
ஊரை
சாதியை

சமயத்தை
ராசியை
நட்சத்திரத்தை
தொலைபேசி இலக்கத்தை

என்  அங்கங்களின்  பரிமாணங்களை

மாதவிடாய் வரும் நாட்களை
....................
.......
இனியும் கேளாதீர்கள் !
நீங்கள் கேட்டு நான் சொல்லாவிட்டால்


தூஷணங்களால் என்னை ஏசாதீர்கள்

நான் செய்வதெல்லாம்
எனக்குப் பிடித்தவர்ருக்கு
வெறுமனே 'லைக்' என்று குறிப்பிடுவதும்
கருத்துக்கள் இடுவதும்
மட்டும் தான்

'நீ ................ கிழவங்களுக்கு
மட்டுந் தான்
கருத்துக்கள்
போடுவியா வேசை' என்று
இனியும் ஏசாதீர்கள்.

நான் செய்த தெல்லாம்
எனக்குப் பிடித்தவற்றுக்கு
கருத்துக்கள்
போடுவது மட்டுந்தான்!

8 comments:

  1. மிக அருமயான வரிகளை கொண்டு மிக அழகான கவி படைத்த உங்களுக்கும்,இதை நான் படிக்க வழி செய்த நண்பர் வேலு சாமிக்கும் என் நன்றிகள்...

    ReplyDelete
  2. தாரணி,எல்லாருக்கும் புரியிற மாதிரி நல்லா எழுதி இருக்கீங்க !

    ReplyDelete
  3. பொதுவாக சாட்டிங் செய்வது என்பதை வெறும் விரச செயற்பாட்டுக்கான களமாக கருதுவது தமிழர்கள் தான் என்றே நினைக்கிறேன். உண்மையில் எம்மவர்கள் (என சொல்ல வெட்கப்பட்டாலும் ) நவீன தொடர்பாடல்களின் முழு பயனை இன்னும் பெறவில்லை...உங்களின் கவிதைகளில் பொது வெளியில் நீங்கள் சந்திக்கும் எதிர்வு மீதான விமர்சனம் தெரிகிறது....இது கவிதையில் ஒரு வகையான உலர்தன்மை (dryness ) என்பார்கள்...கவிதைகள் அருமையாக உள்ளன .

    பார்த்திபன்

    ReplyDelete
  4. தாரணியும் எல்லோருக்கும் புரியும்படியாக எழுதுகிறார்.இன்று பலருடைய கவிதை
    -களுக்கு புரியும் தன்மை இல்லை.வாசித்தால் புரியவேண்டும்.ஏதோ கிறுக்கிறுக்கு
    கிறார்கள்.

    வதிரியார்.

    ReplyDelete
  5. வணக்கம் சகோதரி,
    அமல்ராஜ் அண்ணாவின் பதிவினூடாக உங்கள் வலையினைக் கண்டேன்,
    வித்தியாசமான குறியீடுகள், படிமங்கள், சமூகத்தில் நிகழும் அழுத்தங்கள் முதலியவற்றுக்கெதிரான குரலாக உங்கள் கவிதைகள் அமைந்துள்ளது.

    ReplyDelete
  6. வக்கிர புத்தியுள்ளவர்கள் ஏற்படுத்தும் வலியை நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.
    அதேநேரம், இப்படியானவர்களை 'நண்பர்கள் பட்டியல்'களில் எதற்காக வைத்திருக்க வேண்டும்?

    ReplyDelete
  7. அருமையான வரிகள் [வலிகள்] சகோதரி

    ReplyDelete